Tamil Lyrics

ரோஜா:

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞ்யாபகம்
சின்ன பூக்கள் பார்த்தால் தேகம் பார்த்த ஞ்யாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞ்யாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞ்யாபகம்
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே , வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா ,பெண்மயில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே , கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே , புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே செவைஎன்ன சேவை
முள்ளோடு தான் முதன்கள சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே


குணா
கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

(கண்மணி...........)
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அபிராமி! அபிராமி! அபிராமி!
அதையும் எழுதணுமா?
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே பொன் மானே
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!
அபிராமி லாலியே லாலி லாலியே!

எந்திரன்


காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே


சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா


நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா


ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி


ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி


ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி


ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி